திருவண்ணாமலை:நாயுடுமங்கலம் கிராமத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்தார் சரவணன். விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டையை சேர்ந்த இவர், நேற்றிரவு (ஜூலை 10) 7 மணிக்கு பணிக்காக பைக்கில் நாயுடுமங்கலம் சென்றார்.
ஆனால் அவர் பணிக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, நாயுடுமங்கலம் செல்லும் வழியில் பொற்குணம் அருகே ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கலசப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.