திருவண்ணாமலை: பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 3 முதல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
5வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு.. சிக்கலில் அமைச்சர் எ.வ.வேலு! - எவ வேலு
EV Velu IT Raid: அமைச்சர் எ.வ.வேலுக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் 5வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Published : Nov 7, 2023, 6:49 AM IST
மத்திய பாதுகாப்பு படையினரின் உதவியுடன் திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 5வது நாளான இன்றும் (நவ.7) வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:தொடரும் ஐடி ரெய்டு! அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக வருமான வரி சோதனை!