தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே நாளில் வரும் கார்த்திகை தீபம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு தினம்; திருவண்ணாமலையில் ஐஜி ஆய்வு... - tiruvannamalai

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா பாதுகாப்பு அம்சங்கள் குறித்து வடக்கு மண்டல ஐஜி ஆய்வு மேற்கொண்டார்.

ஒரே நாளில் வரும் கார்த்திகை தீபம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு தினம்
ஒரே நாளில் வரும் கார்த்திகை தீபம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு தினம்

By

Published : Nov 8, 2022, 12:31 PM IST

திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, டிசம்பர் 6ஆம் தேதி அன்று அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் ஆறு மணி அளவில் அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படட உள்ளது.

இந்த கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் கணித்துள்ளது. இந்நிலையில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான, பாதுகாப்பு மற்றும் அண்ணாமலையார் கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, வடக்கு மண்டல ஐஜி கண்ணன் நேற்று அண்ணாமலையார் திருக்கோயில் நேரில் ஆய்வு கொண்ட மேற்கொண்டார்.

பாதுகாப்பு பணிக்காக 12 ஆயிரம் காவல் துறையினரை ஈடுபடுத்த உள்ளதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அண்ணாமலையார் கோயிலில் உள்ளேயும் மற்றும் கோயிலின் வெளியேயும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நேற்று ஆலோசனை நடைபெற்றது.

அண்ணாமலையார் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட வடக்கு மண்டல ஐஜி

வடக்கு மண்டல ஐ.ஜி‌கண்ணன், வேலூர் சரக டிஐஜி (பொறுப்பு) காஞ்சிபுரம் டிஐஜி சத்யபிரியா மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர், அண்ணாமலையார் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டனர்.

இதையும் படிங்க:திருவண்ணாமலை ஐப்பசி மாத கிரிவலம்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..

ABOUT THE AUTHOR

...view details