தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்கும் 6 வகை பழங்கள் அடங்கிய தொகுப்பு விற்பனைத் தொடக்கம்! - fruits bag distribution

திருவண்ணாமலை: கரோனாவை எதிர்த்துப் போராடும் வகையில் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்க, ஆறுவகை பழங்களைக் கொண்ட தொகுப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்.

நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் 6 வகை பழங்கள் அடங்கிய தொகுப்பு விற்பனைத் தொடக்கம்!
நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் 6 வகை பழங்கள் அடங்கிய தொகுப்பு விற்பனைத் தொடக்கம்!

By

Published : Apr 24, 2020, 11:27 AM IST

கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக உலகமே போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் கரோனாவின் சமூகப் பரவலைத் தடுக்கும்விதமாக, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு, திருவண்ணாமலை மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை விற்பனை, வேளாண் வணிகத்துறை சார்பில் நடமாடும் பழத்தொகுப்பு விற்பனை வாகனம் தயார்செய்யப்பட்டு, பல்வேறு சத்துக்கள் அடங்கிய ஆறு வகையான பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு, ஆறு பழங்கள் அடங்கிய பையின் விற்பனையை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி தொடங்கிவைத்தார்.

நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கும் 6 வகை பழங்கள் அடங்கிய தொகுப்பு விற்பனைத் தொடக்கம்

பழத்தொகுப்பு

பழத்தொகுப்பு அடங்கிய பையில் நீர்ச்சத்து அடங்கிய முலாம்பழம் இரண்டு, உடல் வலிமையைக் கூட்ட வாழைப்பழம் ஒரு கிலோ, வைட்டமின்’ஏ’ சத்து கொண்ட பப்பாளி ஒன்று, வைட்டமின் ’சி’ சத்து நிரம்பியுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் மோசம்பி ஒரு கிலோ, எலுமிச்சை 5, பெருநெல்லி அரை கிலோ என மொத்தம் ஆறு வகையான பழவகைகள் மலிவுவிலையில் தொகுப்பு கைப்பையில் போடப்பட்டுள்ளது.

இந்தத் தொகுப்பின் விலை 200 ரூபாயாகும். 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்களுக்கு வீடு தேடிச்சென்று பழங்களின் தொகுப்பை விற்பனை செய்வதற்காக, நடமாடும் வாகனங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: நெசவாளர்களின் நெருக்கடியை புரிந்து கொண்டு உதவுமா தமிழ்நாடு அரசு?

ABOUT THE AUTHOR

...view details