தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனல் கண்ணனுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி தொண்டர்கள் கைது - கனல் கண்ணன்

கனல் கண்ணனை விடுதலை செய்யக் கோரி ஆரணியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட இந்து முன்னணி அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

கனல் கண்ணனுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி கைது
கனல் கண்ணனுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி கைது

By

Published : Aug 17, 2022, 11:30 AM IST

திருவண்ணாமலை: பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவு தலைவரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் கனல் கண்ணனுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கோரியுள்ளனர்.

கனல் கண்ணனுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி கைது

ஆனால் போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி ஆரணி மணிகூண்டு அருகே ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:நகைக்காக கடத்தப்பட்ட குழந்தையை 5 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை; பொதுமக்கள் பாராட்டு!

ABOUT THE AUTHOR

...view details