திருவண்ணாமலையில் கண்காணிப்புப் பொறியாளர் நெடுஞ்சாலைத் துறை, பராமரிப்பு வட்ட அலுவலகத்தை எ.வ. வேலு திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மைச் செயலர் தீரஜ்குமார், மாவட்ட ஆட்சியர் முருகேஷ், நாடாளுமன்றம், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய எ.வ. வேலு, “தனிமனித பொருளாதாரம், கிராமப் பொருளாதாரம், நாட்டின் பொருளாதாரமாக இருந்தாலும் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுவது நெடுஞ்சாலைத் துறைதான்.
தமிழ்நாடு முதலமைச்சர் 10 ஆயிரம் கி.மீ. கிராம சாலைகளை நெடுஞ்சாலைத் துறைக்கு இணையாகத் தரம் உயர்த்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளார்.
நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுவதாக உறுதி
மக்களுக்குப் பயனளிக்கும் கிராம சாலைகளைக் கண்டறிந்து அதற்கு முன்னுரிமையளித்து உள்ளாட்சித் துறை மூலமாக நெடுஞ்சாலைத் துறைக்கு மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக வருமேயானால் முதலமைச்சரின் கனவுத் திட்டமான நெடுஞ்சாலைத் துறை மூலம் தரமுள்ள சாலையாக மாற்றிக் காட்டுவோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற முதலமைச்சர் ஆணையிட்டிருக்கிறார். அதற்கான பணிகளை மேற்கொண்டுவருகிறோம். நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் சாலைகளில் புறவழிச் சாலைகள் அமைக்கப்படும்.
அமைச்சர் ஏ.வ. வேலு பேச்சு திருவண்ணாமலை தெற்கு, மேற்கு, சேத்துப்பட்டு, மருதாடு, வந்தவாசி, கீழ்பெண்ணாத்தூர், செங்கம், செஞ்சி, வேலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 நகரங்களுக்கும் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோதண்டபாணி பிள்ளையின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்க கோரிக்கை