திருவண்ணாமலை:ஆரணி அடுத்த அப்பதாங்கல் கூட்ரோடு அருகில் ஆரணி, சென்னை சாலை உள்ளது. இங்கு ஆரணியிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்தும் சென்னையிலிருந்து போளுர் நோக்கி வந்த அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 17 பேர் படுகாயடைந்தனர்.
பின்னர் 108 ஆம்பூலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் லட்சுமி, அம்பிகா ஆகியோர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.