தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த பக்தர்கள்

திருவண்ணாமலை: சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல கொளுத்தும் வெயிலையும் பாராது பக்தர்கள் தார்ச்சாலையில் நடந்துசென்று சாமி தரிசனம் செய்தனர்.

girivalam-chitra-pournami-tiruvannamalai

By

Published : Apr 21, 2019, 10:38 PM IST


சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெளி மாவட்டங்களிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும்கூட திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள 14 கிலோ மீட்டர் தூரத்தை பக்தர்கள் கிரிவலம் வருவர். அப்படி மலையை கிரிவலம் வருவது மிகவும் புண்ணியம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

எனவே இரவு நேரத்தில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்ததோடு நில்லாமல், பகல்நேரத்தில் கொளுத்தும் வெயிலிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். கிரிவலம் வந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.

வெயில் நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் வந்ததால், தார்ச்சாலை சுட்டெரிப்பதிலிருந்த அவர்களை காக்கம் பொருட்டு தார்ச்சாலையில் நீர் பீச்சியடிக்கப்பட்டது. ஆங்காங்கே தேவைப்பட்ட இடங்களில் எல்லாம் பக்தர்களுக்கும் குடிதண்ணீர் வழங்கப்பட்டது.

சித்ரா பௌர்ணமி கிரிவலம்
ஏராளமான வாகனங்கள் ஒரே நேரத்தில் திருவண்ணாமலை நோக்கி வந்த காரணத்தால் திண்டிவனம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் காலையில் போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி சாலை மறியலில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட நேரத்துக்கு பேருந்துகள் வராத காரணத்தால் பேருந்தின் மேற்கூரைகளிலும் பயணிகள் பயணித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details