திருவண்ணாமலை: செங்கம் அடுத்த சாத்தனூர் பகுதியில், மோகன் என்பவர் தன்னுடைய வீட்டில் நண்பர்களுடன் சூதாட்டம் விளையாடுவது வழக்கம். வழக்கம்போல முத்தனூர் பகுதியைச் சேர்ந்த முனுசாமி மகன் வெங்கடேஷ் என்பவர் சூதாட மோகன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், மாலை 5 மணி அளவில் வெங்கடேசன் மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது உறவினருக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற உறவினர்கள் வெங்கடேசனின் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும், மருத்துவமனை 500 மீட்டர் தொலைவில் உள்ள நிலையில் மாரடைப்பு வந்த வெங்கடேசனை மருத்துவமனையில் ஏன் அனுமதிக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
அவர்கள் மீது தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சாத்தனூர் திருவண்ணாமலை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.