தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலையில் பூக்களின் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி! - TamilNadu Flower Price

திருவண்ணாமலை: விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Flowers Price Hike In Thiruvannamalai
Flowers Price Hike In Thiruvannamalai

By

Published : Aug 21, 2020, 4:55 PM IST

திருவண்ணாமலை அடுத்த கீழ்நாத்தூர் தற்காலிக பூ சந்தையில் விநாயகர் சதுர்த்தி திருவிழா நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக அலைமோதியது.

தற்காலிக பூச்சந்தை அமைந்துள்ள பைபாஸ் சாலை கீழ்நாத்தூர் பகுதியில் பொதுமக்களின் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. பூக்களை வாங்க முண்டியடித்துக் கொண்டு வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.

மல்லிப்பூ கிலோ 500 ரூபாய்க்கும், முல்லை கிலோ 400 ரூபாய்க்கும், ஜாதிமல்லி கிலோ 350 ரூபாய்க்கும், காக்கட்டான் கிலோ 300 ரூபாய்க்கும், சாமந்தி பூ கிலோ 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

மேலும் பூக்கள் சாதாரண நாள்களில் விற்கப்படும் விலையை விட அதிகரித்துள்ளதால் விவசாயிகள் நல்ல லாபம் ஈட்டும் வாய்ப்பாக இது அமைந்துள்ளது. பூக்களின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details