கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவால் பூ வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம், நூக்காம்பாடி பகுதியில் அதிக அளவு விவசாயிகள் சாமந்தி, மல்லி, முல்லை, கேந்தி, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களை அதிகமாகப் பயிரிட்டு வருகின்றனர்.
தற்போது பூக்கள் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கொள்முதல் செய்யும் பூக்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மொத்த பூ வியாபாரிகள் கிராமத்திற்கே வந்து பூக்களைக் கொள்முதல் செய்கின்றனர்.
பூக்களைக் கொள்முதல் செய்யும் பூ வியாபாரிகள் இதுகுறித்து பூ விவசாயிகள் கூறுகையில், "ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பூக்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்தோம். ஆனால், விவசாயிகளின் கஷ்டங்களை புரிந்து கொண்டு பூ வியாபாரிகள் கிராமத்திற்கே வந்து கொள்முதல் செய்வது மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ஊரடங்கால் நஷ்டத்தில் பூ விவசாயிகள்: இழப்பீடு வழங்க கோரிக்கை!