தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஐந்து பேர் கைது! - ஐந்து பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம்

திருவண்ணாமலை: அத்தியந்தல் கிராமத்திலுள்ள பிரபல தனியார் தங்கும் விடுதியில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஐந்து பேரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Five arrested for sexually abusing women
Five arrested for sexually abusing women

By

Published : Mar 12, 2020, 7:44 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில், பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக மாவட்ட கண்காணிப்பாளர் சிபிச்சக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அத்தகவலின் பேரில், தனிப்படை காவலர்கள் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

தனிப்படை காவல் துறையினர், அத்தியந்தல் கிராமத்திலுள்ள பிரபல தனியார் தங்கும் விடுதியில் சோதனை மேற்கொண்ட போது, அங்கு பெண்களைப் பாலியல் தொழிலில், சிலர் ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சஞ்சய் (40), ஜெகன் (26), பிரபாகர் (24), சக்தி (26), ராமலிங்கம் (38) ஆகிய ஐந்து பேரைக் கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஐந்து பேர் கைது

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்கும்படி உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்களை அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு தீர்ப்பு வழங்கினார். பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஐந்து பேரையும் காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:7ஆம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொந்தரவு: இளைஞர் போக்சோவில் கைது!

ABOUT THE AUTHOR

...view details