தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தி.மலையில் மீன் வியாபாரி கழுத்தறுத்துக் கொலை: காவல்துறையினர் விசாரணை - fish vendor murder

திருவண்ணாமலை மாவட்டம் மணலூர் பேட்டையைச் சேர்ந்த மீன் வியாபாரி கிறிஸ்துராஜ் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீன் வியாபாரி கழுத்தறுத்துக் கொலை -காவல்துறையினர்  விசாரணை
மீன் வியாபாரி கழுத்தறுத்துக் கொலை -காவல்துறையினர் விசாரணை

By

Published : May 22, 2021, 3:47 PM IST

திருவண்ணாமலை :திருவண்ணாமலை மாவட்டம், தச்சம்பட்டு-மணலூர்பேட்டை சாலையில் மீன், கோழி மொத்த வியாபாரம் செய்து வந்தவர் கிறிஸ்துராஜ். அவரது மனைவி சென்னையில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துச் சென்றுவிட்டதால் நேற்று (மே21) கிறிஸ்துராஜ் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இன்று காலை வெகுநேரமாகியும் கிறிஸ்துராஜ் வீட்டின் கதவு திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது, கிறிஸ்துராஜ் கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதுதொடர்பாக, தச்சம்பட்டு காவல் நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், கிறிஸ்துராஜின் உடலைக் கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு : 3ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

ABOUT THE AUTHOR

...view details