தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயர்மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! - உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை: விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உயர்மின் கோபுரத்தின் மீது ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயர்மின் கோபுரத்தில் ஏறி ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகள்
உயர்மின் கோபுரத்தில் ஏறி ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகள்

By

Published : Feb 20, 2021, 7:59 PM IST

திருவண்ணாமலை அடுத்த மங்கலம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது விவசாய நிலத்தில உயர்மின் கோபுரம் அமைப்பதற்காக இன்று (பிப்.20) தளவாட பொருள்கள் கொண்டு வரப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஏழுமலை, தனது குடுமபத்தினருடன் அருகில் உள்ள மற்றொரு உயர் மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டல் விடுத்தார்.

இதனையறிந்த அப்பகுதி விவசாயிகள், ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நிலத்திற்கான உரிய இழப்பீடு வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதையும் படிங்க: உயர் மின் கோபுரத்தின் மீது ஏறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details