திருவண்ணாமலை அடுத்த பெரியகோளாப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர் அய்யனார், மது அருந்திவிட்டு விவசாயிகளிடம் தகாத வார்த்தையில் பேசுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். மேலும் மதுபோதையில் வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் ஆங்காங்கே மதுபாட்டில்கள் போடப்பட்டுள்ளன. வேளாண் கூட்டுறவு கடன் சங்க கட்டட வளாகம் மதுப் பிரியர்களின் கூடாரமாகவும், சமூக விரோதிகளின் புகலிடமாக இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கூட்டுறவு வங்கியின் தலைவர் அய்யனார், விவசாயிகளிடம் கடன் கணக்கு புதுபிக்கும்போது கூடுதலாக பணம் கேட்கிறார் என்றும் கூறப்படுகிறது. அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட மகளிர் குழுக்கள் உள்ளன. கடன் வழங்க குழு ஒன்றுக்கு ஐந்தாயிரம் வரை லஞ்சம் கேட்பதாகவும், விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.