திருவண்ணாமலை நகரில் உள்ள வட்டாட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் உழவர் சந்தை இயங்கி வருகிறது. கிராமப் பகுதிகளில், விவசாயிகள் சாகுபடி செய்யும் காய்கறிகள், உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருவது வாடிக்கையாக இருந்தது.
கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை கடந்த ஆறு மாத காலமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எட்டு உழவர் சந்தைகள் மூடப்பட்டன.
தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில், உழவர் சந்தைகளை திறக்கலாம் என்று அறிவித்திருந்தது.
இதனையடுத்து அரசின் வழிகாட்டுதலின்படி கரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தகுந்த இடைவெளி மற்றும் முகக் கவசங்கள் அணிந்து உழவர் சந்தைகளை திறப்பதற்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.
வழக்கமாக 107 கடைகள் உழவர் சந்தையில் இயங்கிவந்த வந்த நிலையில் இன்று (அக்.1) 70 கடைகள் திறக்கப்பட்டு காய்கறிகளை விற்பனை செய்தனர்.
மீண்டும் திறக்கப்பட்ட உழவர் சந்தை: விவசாயிகள் மகிழ்ச்சி
திருவண்ணாமலை: கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மூடப்பட்டிருந்த உழவர் சந்தை மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உழவர் சந்தை திறப்பு
நீண்ட நாட்களுக்குப் பிறகு உழவர் சந்தையில் விற்பனை தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், விற்பனையும் மந்தமாகவே உள்ளது என்று உழவர் சந்தையில் வியாபாரம் செய்தவர்கள் தெரிவித்தனர்.