திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்செங்கம் துரிஞ்சாபுரம் பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவரது குடும்பத்தினருக்கும், எதிர் வீட்டுகாரர் ரவி என்பவரது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக, திருப்பதி கடந்த செப் 15ஆம் தேதியன்று மேல்செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் செப்.18ஆம் தேதி ரவி, திருப்பதி மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் உடனடியாக விசாரணைக்காக திருப்பதி மற்றும் அவரது மகன், மகள், பேத்தி, மருமகன் உள்ளிட்டோரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். மேல்செங்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளர் தங்கராசு திருப்பதி மகன் ஆனந்த் மற்றும் பேத்தியை அடித்ததாக கூறப்படுகிறது.