திருவண்ணாமலை: கீழ் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீர சண்முகம். இவர் கீழ் கொளத்தூர் பகுதியில் உள்ள தனது 10 சென்ட் நிலம் மற்றும் வீடு ஆகியவற்றுக்குத் தனது பெயரில் பட்டா மாற்றம் செய்து தரக்கோரி, செய்யாறு வட்டாட்சியர் சுமதியிடம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தொடர்ந்து மனு அளித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த முன்னாள் ராணுவ வீரர் சண்முகம், தனது மனுவின் மீது வட்டாட்சியர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, வட்டாட்சியர் சுமதி வாகனத்திற்கு முன்பாக தரையில் படுத்து வட்டாட்சியர் காலில் விழுந்து போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இவரது வீடு மற்றும் நிலத்தைப் பட்டா மாற்றம் செய்து தருவதற்கு, கீழ் கொளத்தூர் அப்போதைய கிராம நிர்வாக அலுவலர் பானுமதி, ரூபாய் 4,000 மற்றும் 2,000 என இரண்டு தவணைகளாக 6 ஆயிரம் ரூபாய் சண்முகத்திடம் பணம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், இதுவரை தன்னுடைய பெயருக்குப் பட்டா மாற்றம் செய்து தரவில்லை என்றார்.
கிராம நிர்வாக அலுவலர் தன்னிடம் பணம் பெற்றுக் கொண்டது குறித்து காவல்துறையினர் மற்றும் உயர் அலுவலர்களிடம் தெரிவித்ததால், இதுவரை தனது பெயருக்குப் பட்டா மாற்றம் செய்து தராமல் அலுவலர்கள் தன்னை இழுத்தடிப்பதாக முன்னாள் ராணுவத்தினர் சண்முகம் வருத்தத்துடன் தெரிவித்தார்.
பட்டா பெயர் மாற்றம் செய்யக்கோரி வட்டாட்சியர் காலில் விழுந்த முன்னாள் ராணுவ வீரர் இதையும் படிங்க:வீடே இல்லாத பெண்ணிற்கு ரூ.45 கோடி வரி ஏய்ப்பு நோட்டீஸ் ; பாதிக்கப்பட்ட பெண் புகார்