திருவண்ணாமலை மாவட்டத்தின் காட்டுப்பகுதிகளில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் காணிப்பாளர் சிபிச்சக்கரவர்த்தியின் உத்தரவின் பேரில், கூடுதல் கண்காணிப்பாளர் அசோக் குமார் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
சாத்தனூர் அணை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது! - த்தனூர் அணை அருகே சூதாட்ட
திருவண்ணாமலை: சாத்தனூர் அணை அருகேயுள்ள வீராணம் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இக்குழு இன்று சாத்தனூர் அணை அருகேவுள்ள வீராணம் காட்டுப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போது, அங்கு சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தோர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழுமலை(42), அயிலு(42), குமார்(35), பாண்டியன்(32) உள்ளிட்ட 11 பேரைக் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 11 இருசக்கர வாகனங்கள், சூதாட்டத்தில் பந்தயம் கட்டிய ரூ.41 ஆயிரம் ரொக்கம் முதலியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:இளம்பெண்ணை அடித்துக்கொன்ற வழக்கில் ஒருவர் கைது!