திருவண்ணாமலை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உணவின் மகத்துவம் குறித்தும், உணவை வீணாக்கக் கூடாது என்று வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்சி சார்பற்ற விவசாய சங்கம் சார்பில் திருவள்ளுவர் வேடம் அணிந்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டொன்றுக்கு 400 கோடி உழவர்கள் உணவு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். உழவுத் தொழிலை விட்டு பலர் சென்றாலும் பிற தொழிலை விட முதன்மையான தொழிலாக உணவு உற்பத்தி உள்ளது. சோமாலியா நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் உயிரிழக்கின்ற நிலையில், ஒரு சோற்று பருக்கை கூட வீணாக்காமல் உணவு உண்ண வேண்டும்.
தமிழ்நாட்டில் 125 லட்சம் டன் உணவு தானியம் பெருக்க வேளாண்மை துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் திருவள்ளுவர் வேடமணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உணவை வீணாக்காதீர் என விவசாயிகள் விழிப்புணர்வு நூதன போராட்டம் மேலும் உணவின் மகத்துவம் குறித்தும், உணவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்தும், உணவு உண்ணும் போது ஒரு பருக்கை சோற்றைக் கூட வீணாக்காமல் உண்ண வேண்டும் என்று திருவள்ளுவர் வேடம் அணிந்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதையும் படிங்க:தீபத்திருவிழா: மதுரை - திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்