தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தி.மலையை காட்சிப்பொருளாக்க நினைப்பது பாஜக' - இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பது திமுக! - DMK Ev velu slams BJP news

திருவண்ணாமலை: ஆன்மிகத் தலமான திருவண்ணாமலையைக் காட்சிப்பொருளாக்க நினைத்தவர்கள் பாஜக என எ.வ. வேலு குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருவண்ணாமலையை காட்சிப்பொருளாக்க நினைத்தவர்கள் பாஜக -எவ வேலு குற்றச்சாட்டு!
திருவண்ணாமலையை காட்சிப்பொருளாக்க நினைத்தவர்கள் பாஜக -எவ வேலு குற்றச்சாட்டு!

By

Published : Mar 16, 2021, 4:56 PM IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளதையடுத்து, கடந்த 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.

அந்தவகையில், நேற்று (மார்ச் 15) திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எ.வ. வேலு திருவண்ணாமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வெற்றிவேலிடம் வேட்புமனுவைத் தாக்கல்செய்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய எ.வ. வேலு, “திருவண்ணாமலை தொகுதி ஆன்மிகத் தலமாக இருக்கின்ற காரணத்தினால் பல்வேறு நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து பல்வேறு தரப்பினர் வருகைதருகின்றனர்.

திருவண்ணாமலையைக் காட்சிப்பொருளாக்க நினைத்தவர்கள் பாஜக - எ.வ. வேலு குற்றச்சாட்டு!

ஆனால், திருவண்ணாமலை புகழ் மங்கும் வண்ணம் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு இந்தப் பகுதியை அகழாய்விற்கு ஒதுக்கி, காட்சிப் பொருளாக்க நினைத்தனர். இதனை மீட்டுத் தந்தவர் கருணாநிதி” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...18 வயதை எட்டிய முதல் வாக்காளர்களின் வாக்கு எந்த கட்சிக்கு? - ஈடிவி பாரத் கள ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details