திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியின், தேமுதிக வேட்பாளர் நேரு, புதுப்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடமாத்தூர், மாங்குட்டை, மேல்நாச்சிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வடமாத்தூர் பகுதியில் வயல்வெளியில் கலை வெட்டும் பெண்களுடன், வயலில் இறங்கி தேமுதிக வேட்பாளரும் களை எடுத்து முரசு சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
பின்னர் மேல்நாச்சிபட்டு பகுதியில், எம்ஜிஆர் மற்றும் விஜயகாந்த் வேடமணிந்த கலைஞர்கள் வீதி வீதியாக சென்று அங்குள்ள பெண்களிடம் வாக்கு சேகரித்தனர். மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்திருந்த பெண்களிடமும், வேட்பாளர் நேரு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.