தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துவருகிறது. அந்தவகையில், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் கரோனா வைரஸ் தொற்றால் உடல்நிலை சரியில்லை என்றால் அவர்களை தனியாக தங்க வைப்பதற்கான இடத்தை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இடங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
”இந்தக் கரோனா வைரஸ் தொற்று நோய் பாதித்தவர்களை மாவட்ட மருத்துவமனை சிறப்பாக கவனித்துவருகிறது. முதல் நிலையில் உள்ளவர்களை அந்தப் பகுதியில் தங்க வைப்பதற்கான இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்துவருகிறோம். பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். இந்த 144 தடை உத்தரவை பொதுமக்கள் மதிக்க வேண்டும்.
மக்களை துன்புறுத்தி 144 தடை உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை அதனால் பொதுமக்கள் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்”
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: கேன்சர் மருந்து கிடைக்காமல் தவித்த தமிழ்நாட்டு நோயாளி; கைகொடுத்த கேரளா!