திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர்மேலாண்மை குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள், விழிப்புணர்வு ஊர்வலங்கள் மற்றும் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி மேற்கொண்டு வருகிறார்.
மழைநீர் சேமிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு!
திருவண்ணாமலை: மழைநீர் சேமிப்பு குறித்தும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதன் ஒரு பகுதியாக, மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நீர்மேலாண்மையை மேம்படுத்தும் வகையில் மாவட்டத்தில் பல திட்டங்களை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. நீர்மேலாண்மையை பொது மக்களுக்கு வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், இன்று திருவண்ணாமலையில் உள்ள பெரிய பள்ளி வாசலில் தொழுகையில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சகோதரர்களிடம் தண்ணீரின் அவசியம் குறித்தும், மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்தும் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு துண்டு பிரசூரங்களை விநியோகித்தார்.