திருவண்ணாமலை நகரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வேளாண் மசோதாக்களை கண்டித்தும், நீதிமன்ற உத்தரவுப்படி உணவு பாதுகாப்பு சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை இணைத்திட வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போருக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேளாண் மசோதாக்களை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்! - வேளாண் சட்ட மசோதா
திருவண்ணாமலை: நீதிமன்ற உத்தரவுப்படி உணவு பாதுகாப்பு சட்டத்தில் மாற்றுத் திறனாளிகளையும் இணைத்திட வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Differently abled people protest in Thiruvannamalai
இதில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கண்டன கோஷங்களை எழுப்பி முழக்கமிட்டனர்.
அப்போது பேசிய அவர்கள், டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை இணைக்க உரிய சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வலியுறுத்தினர்.