சென்னை:திருவண்ணாமலை நகரப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெரு, தேனிமலை, கலசப்பாக்கம், போளூர் ஆகிய 4 இடங்களில் நள்ளிரவில் பாரத ஸ்டேட் வங்கி, ஒன்இந்தியா வங்கி ஏடிஎம்களில் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ரூ.75 லட்சம் வரை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இதே போல் சென்னையில் நேற்று முன்தினம் நகைக்கடை ஒன்றில் 9 கிலோ தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டு கொள்ளையர்கள் ஆந்திரா தப்பிச்சென்றதால் அவர்களைப் பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா சென்றுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை, திருவண்ணாமலையில் அரங்கேறிய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு கும்பலும் ஆந்திர மாநிலத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தநிலையில் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கு எதிரொலியால், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுடன் இணைந்து காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்ட தீவிர வாகன சோதனை செய்ய தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.