திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோயிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு ஆண்டுதோறும் கோழி அடித்து பொங்கல் வைத்து பூஜை செய்து இறை வழிபாடு நடத்துவதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.
ஆனால் இந்தாண்டு கரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கோயில்களிலும் வழக்கத்திற்கு மாறாக காவல்துறையினர் மூடி, சீல் வைத்து, பேரிகேட்கள் மூலம் தடுப்புகள் அமைத்து, பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் நுழையாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறையினர் கோயிலுக்கு 300 மீட்டருக்கு முன்பாகவே தடுப்புகள் அமைத்து மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொதுமக்கள் பொங்கல் வைத்து பூஜை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதனால் செய்வதறியாது தவித்து வரும் பக்தர்கள் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள இடத்திலேயே தேங்காயை உடைத்து இறைவனை வழிபட்டு செல்ல கூடிய நிலைமைகள் கோயிலுக்கு முன் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலும் கோயில் வளாகம், பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
ஆடி வெள்ளிக்கு பொங்கல் வைக்க முடியாமல் தவித்த பக்தர்கள் - Devotees suffered
திருவண்ணாமலை: கரோனா பாதுகாப்பு நடவடிக்கையால் ஆடி வெள்ளியன்று பக்தர்கள் கோயில்களுக்கு முன் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளுக்கு முன்பாக தேங்காய் உடைத்து சாமியை வழிபடும் நிலை ஏற்பட்டுள்ளது.
Devotees who were unable to celebrate Pongal on Aadi Friday