நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரை நாடு முழுவது பரப்பரப்பாக நடந்து வரும் நிலையில்துணை முதலமைச்சர்ஓ. பன்னீர்செல்வம் திருவண்ணாமலை கடலைக்கடைமூளை என்றபகுதியில் நேற்று பரப்புரை செய்வதாக இருந்தது.
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்ததால்ஏராளமான தொண்டர்கள் இப்பகுதியில் கூடியிருந்தனர். சரியாக ஒன்பது மணிக்கு துணை முதலமைச்சர் பரப்புரை செய்ய வருவார் என்று அறிவிக்கப்பட்டது.
நேரம் நெருங்க நெருங்க தொண்டர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கடலைக்கடைமூளை பகுதிக்கு வந்தவண்ணம் இருந்த. ஆனால் பத்து மணி ஆகியும் துணை முதல்வர் வரவில்லை. இதனால் சிலர் குத்தாட்டம் போட்டு அங்கிருந்தவர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தனர். ஆனாலும் நெடுநேரமாகியும் துணை முதல்வர் வராததால் தொண்டர்கள் பலரும் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.
கடைசியாக பத்தே முக்கால் மணிக்கு மேல்தான் அந்த இடத்திற்கு துணை முதல்வர் வந்தார். இதற்குள் தொண்டர்கள் கலைந்து சென்றதால் ஓ. பன்னீர்செல்வம் பரப்புரை செய்யாமல் சென்றுவிட்டார்.
இதனால் நீண்ட நேரமாக காத்திருந்த பல தொண்டர்கள் அவர் பேசுவதைக் கேட்க முடியாமல் போனதால், காத்திருந்ததெல்லாம்வீணாகிவிட்டது என்று முணுமுணுத்தபடி சென்றனர்.