திருவண்ணாமலை:பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வெளி மாநிலம் மட்டுமல்லாமல் வெளிநாட்டு பயணிகளும் வருகை தருவது வழக்கம். அந்த வகையில் நாள்தோறும் நடைபெறும் பூஜைகளில் வெளிநாடுகளை சேர்ந்த பயணிகள் சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.
வீடியோ: அண்ணாமலையார் கோயிலில் பாரம்பரியத்தை நினைவுகூர்ந்த பிரேசில் தம்பதி - அண்ணாமலையார் கோயிலில் பிரேசில் தம்பதி
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரேசில் நாட்டை சேர்ந்த தம்பதி தரிசனம் செய்தனர்.
நடன பயிற்சியில் ஈடுபட்ட பிரேசில் தம்பதி
அதன்படி பிரேசில் நாட்டில் இருந்து வருகை புரிந்த ஆலிஸ் மற்றும் ஹானா தம்பதி இன்று (ஜனவரி 31) அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது இருவரும் தமிழ்நாட்டின் பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்தை போற்றும் வகையில் போட்டோ சூட் நடத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வெளிநாட்டினர் பரதநாட்டிய இசைவுகளை செய்வதை கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
இதையும் படிங்க:கடையநல்லூர் அருகே களைகட்டிய பூக்குழி திருவிழா!