திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முழுவதும் உடனடியாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
ஊழியர்களுக்கு கரோனா: நகைக்கடை, நகராட்சி அலுவலகத்துக்கு சீல் - பிரபல நகை கடைகள் சில்
திருவண்ணாமலை: நகராட்சி களப்பணியாளர், நகைக்கடை ஊழியர்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நகைக்கடை, நகராட்சி அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.
நகராட்சி அலுவலகம்
அதேபோல் திருவண்ணாமலையில் இயங்கி வரும் பிரபல நகைக்கடையில் பணிபுரியும் இருவருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் அந்த நகைக்கடையை நகராட்சி ஊழியர்கள் மூடி சீல் வைத்தனர். திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம், நகைக்கடை என அடுத்தடுத்து கரோனா தொற்றால் மூடப்பட்டது நகரில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.