திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வரை கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5085ஆக இருந்தது, மேலும் இன்று புதிதாக 267 பேருக்கு நோய் தொற்று உறுதியானதையடுத்து, மாவட்டம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5352ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலையில் உச்சம்தொட்ட கரோனா பாதிப்பு - ரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்
திருவண்ணாமலை: மாவட்டத்தில் உச்சமாக இன்று ஒரே நாளில் 267 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்து 352 ஆக அதிகரித்துள்ளது.
corona infection spread new high tiruvannamalai
மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த மூன்றாயிரத்து 212 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று புதிதாக நோய்தொற்று பாதிக்கப்பட்டவர்கள், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.