திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 148 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 3 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 151ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போதுவரை 13 பேர் நோய் தொற்றிலிருந்து மீண்டு, 137 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சென்ன சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கும், உலகம்ப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.