தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணாமலையார் கோயிலில் பணம் பெற்று தரிசனம் நடப்பதாக புகார் - Appropriate action by Hindu Religious Welfare Department

வெளி மாநில பக்தர்களிடம் பணம் பெற்று நேரடியாக அண்ணாமலையார் கருவறைக்கு அழைத்துச் செல்வதாக பக்தர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வெளிமாநில பக்தர்கள் நேரடியாக அண்ணாமலையார் கருவறைக்கு அனுமதி பக்தர்கள் புகார்
வெளிமாநில பக்தர்கள் நேரடியாக அண்ணாமலையார் கருவறைக்கு அனுமதி பக்தர்கள் புகார்

By

Published : Aug 12, 2022, 10:09 PM IST

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களிடம் கோயிலில் பணிபுரியும் குருகளும் அதிகாரிகளே கையூட்டு பெற்று உள்ளே அழைத்துச் செல்வதாக புகார் எழுந்துள்ளது. திருவண்ணாமலையில் மாதந்தோறும் கிரிவலத்திற்கு, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் லட்சக்கணக்கில் கிரிவலம் செல்ல வருவது வழக்கம்.

இந்நிலையில் தற்போது ஆந்திராவில் இருந்து மக்கள் அதிகம் வந்தவண்ணம் உள்ளனர். நேற்று ஆடி மாத கிரிவலம் என்பதால் பக்தர்கள் லட்சக்கணக்கில் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தனர். இந்நிலையில் இன்று அண்ணாமலையார் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்த நிலையில் கோயிலில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் குருக்கள் வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்களிடம் கையூட்டு பெற்று கொண்டு தரிசனம் செய்கின்றனர்.

வெளிமாநில பக்தர்கள் நேரடியாக அண்ணாமலையார் கருவறைக்கு அனுமதி பக்தர்கள் புகார்

கருவறையில் இருந்து பக்தர்கள் வெளியே வரும் வழியில் கையூட்டு பெற்று பக்தர்களை உள்ளே தவறான வழியில் வெளிமாநில பக்தர்களை நேரடியாக அண்ணாமலையார் கருவறைக்கு அழைத்துச் செல்வதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க:சுதந்திரத்தை அடையாளப்படுத்தியது திருவாவடுதுறை ஆதீனம் அனுப்பிய செங்கோல்

ABOUT THE AUTHOR

...view details