திருவண்ணாமலை அடுத்த மங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம், ஜெயந்தி, ரமேஷ், பாபு. இந்த நான்கு பேரும் இணைந்து அப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சீட்டு நடத்திவந்துள்ளனர். இதில் ரமேஷ் துணி வியாபாரம் நடத்திவருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த பலர் இவர்களிடம் மாதம் சீட்டு ஒரு நபருக்கு 3 லட்சம் வீதம், ஆறு நபர்களுக்கு 18 லட்சம் கட்டிவந்துள்ளனர்.
சீட்டு முடிந்து பல மாதங்கள் ஆகியும் இவர்களுக்கு உரிய தொகையை வழங்காமல் சீட்டு நடத்தியவர்கள் காலம் கடத்திவந்துள்ளனர். இதனால் சீட்டு பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்த மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், கஸ்தூரி, பரணி, குமார், ரங்கசாமி, மஞ்சுளா ஆகிய ஆறு பேர் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (பிப். 8) புகார் அளித்தனர்.
சீட்டு நடத்தி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி புகார் அதில், சீட்டு பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தங்களுடைய பணத்தை மீட்டுத்தரக் கோரியும் குறிப்பிட்டிருந்தனர்.
இதையும் படிங்க:பள்ளி அருகே டாஸ்மாக் அமைப்பதை கைவிட வலியுறுத்தி பொதுமக்கள் மனு