திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுகாதார வட்டத்தில் சேரந்தாங்கல் கிராமம், செங்கம் பேரூராட்சி, மில்லத் நகர், ஆகிய கோவிட்-19 கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று (ஏப்ரல் 26) மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார் .
அப்போது செங்கம் சுகாதார வட்டம், பெரும்பாக்கம் ஊராட்சி, சேரந்தாங்கல் கிராமம் ஆகியவற்றில் 8 நபர்களுக்கும், செங்கம் பேரூராட்சி, மில்லத் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து நபர்களுக்கும் கரோனா நோய் ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கோணக்குட்டை கேட் அருகே மாவட்ட ஆட்சியர் சென்றுகொண்டிருந்தபோது, எதிரில் திருப்பத்தூருக்குச் சென்ற தனியார் பேருந்தில் அதிகளவு பயணிகளை ஏற்றிச் சென்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக பேருந்தை நிறுத்தினார்.