திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் உள்ள ராமர்பாதம் கோயில் அருகே, இந்திய அரசின் நேரு யுவ கேந்திரா மற்றும் ரிபிங் எனர்ஜி இன் ஃபேக்டரி, சுவாமி விவேகானந்தா மகளிர் நற்பணி மன்றம் இணைந்து கரோனா நோய்த் தொற்றில் இருந்து சாதுக்கள் மற்றும் பொதுமக்களைப் பாதுகாக்க நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் கலந்துகொண்டு நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் செவ்வாழை, பேரிக்காய், ஆரஞ்சு உள்ளிட்டப் பழங்களை வழங்கினார்.