திருவண்ணாமலை:கீழ்பென்னாத்தூரில் திருவண்ணாமலை சென்னை பிரதான சாலையில் அமைந்துள்ள வட்டாட்சியர் அலுவலக கட்டடத்தில் முதல் மாடியில் செயல்பட்டு வரும் கூட்டரங்கிற்குள் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் கற்கள் நேற்று அதிக சத்துடன் பெயர்ந்த சம்பவம் அரசு ஊழியர்கள், பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஈடிவி பாரத்தில் இச்சம்பவம் செய்தியாக வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து, கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சப்ஜான் முன்னிலையில் திருவண்ணாமலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கௌதம் தலைமையிலான குழுவினர் இன்று (பிப்.24) ஆய்வு மேற்கொண்டனர்.