திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் சாலை, வட்டாரங்கொட்டா தெருவைச் சேர்ந்த முரளி என்பவரது குடோனனிலிருந்து தடைசெய்யப்பட்ட சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள 49 மூட்டைகள் அடங்கிய குட்கா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அவரிடமிருந்து இரண்டு கார்களும் சரக்கு வேன் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டன.
சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்காவை பதுக்கியவர் கைது! - குட்கா வழக்கு
திருவண்ணாமலை: சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தவரை கைது செய்த காவல் துறையினர், குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
Banned Gutka seized by Police officiers
குட்காவை பதுக்கி வைத்திருந்த முரளி கைது செய்யப்பட்டுள்ளார். கார் ஓட்டுநரான சுரேஷ் தப்பியோடியதால், அவரைப் பிடிக்க காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரகசிய போன்கால்...வளைக்கப்பட்ட போதை சப்ளையர்கள்... 1620 கி.கி குட்காவை பறிமுதல் செய்த காவல் துறை!