கர்மவீரர் காமராஜரின் 118 வது பிறந்தநாள் விழாவையொட்டி, சென்னை உதயம் மக்கள் சேவை மையத்தின் சார்பில், முன்னாள் சுதந்திரப் போராட்ட தியாகி வி.வி.திலக்சாஸ்திரி அவர்களின் மகள்களான டாக்டர்.லட்சுமி ராஜாராம் மற்றும் காட்டாம் பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி ஆகியோர் இணைந்து, தானியங்கி கைக்கழுவும் கருவியை மாணவர்களின் நலனுக்காக வழங்கினர்.
தானியங்கி கைக்கழுவும் கருவி வழங்கிய சுதந்திரப் போராட்ட வீரரின் வாரிசுகள்! - திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்
திருவண்ணாமலை: கரோனா நோய்த் தொற்றிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கத் தானியங்கி கைக்கழுவும் கருவியை, சுதந்திரப் போராட்ட வீரரின் பெண் வாரிசுகள் வழங்கினர்.
முதற்கட்டமாக, திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு, பழையனூர் ஆகிய பகுதிகளில் உள்ள 12 அரசு பள்ளிகளுக்கும், அதேபோல் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு வருபவர்கள் பயன்பெறும் வகையில் காட்டாம் பூண்டி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கும் தானியங்கி கைக்கழுவும் கருவியினை ரூபாய் 40 ஆயிரம் மதிப்பில் வழங்கினர்.
முன்னதாக திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் முன்னிலையில், 12 அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்குத் தானியங்கி கைக்கழுவும் கருவிகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.