தருமபுரி: திருவண்ணாமலைமாவட்டத்தில் உள்ள நான்கு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்த, மர்ம கும்பல் ரூ.75 லட்சம் கொள்ளையடித்துச் சென்றதன் எதிரொலி காரணமாக, தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம் சுங்கச்சாவடி வழியாக வந்து செல்லும் கார் உள்ளிட்ட வாகனங்களை தொப்பூர் போலீசார் தீவிர வாகன சோதனைக்கு உட்படுத்தினர்.
ஏடிஎம் கொள்ளை எதிரொலி: தருமபுரி -சுங்க சாவடியில் போலீசார் தீவிர வாகனத் தணிக்கை! - robbery incident
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளை நடந்த எதிரொலியால் தருமபுரி மாவட்ட சுங்க சாவடியில் போலீசார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏடிஎம் கொள்ளை எதிரொலி: தருமபுரி-சுங்க சாவடியில் போலீசார் தீவிர வாகன தணிக்கை!
இந்த சுங்க சாவடி வழியாக வந்து செல்லும் கார் உள்ளிட்ட வாகனங்கள் எங்கிருந்து, எங்கு செல்கிறது என்பது குறித்து ஆவணங்களை, போலீசார் சரிபார்த்த பின்னரே வாகனங்கள் சென்றுவர அனுமதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இதையும் படிங்க:சென்னை நகைக்கடையில் அரங்கேறிய துணிகர கொள்ளை: ஆந்திரா விரைந்தது தனிப்படை