திருவண்ணாமலை:நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலையில் கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை திருக்கோயில் கருவறையில் முன்பு 4 மணிக்கு பரணி தீபமும் அதனை தொடர்ந்து அன்று மாலை திருக்கோயில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட தீபம் மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது.
டிசம்பர் 6ஆம் தேதி ஏற்றப்பட்ட மகா தீபம் தொடர்ந்து 11 நாள்கள் தீப மலை உச்சியில் ஜோதிப் பிழம்பாய் அண்ணாமலையார் பக்தர்களுக்கு காட்சி வழங்கினார். அதன்படி இன்று நிறைவு பெறவுள்ள நிலையில் திருக்கோயிலில் உள்ள நவ கோபுரங்களும் மின் ஒளியில் மின்னுவதுடன் நகரமே மலை உச்சியில் இருந்து பார்க்கும்போது அதன் ஒளியில் மின்னும் காட்சி பிரமிக்க வைக்கிறது.