திருவண்ணாமலை:'மகா தீபத்திருவிழா'வின் 8ஆம் நாளான நேற்று (டிச.4) பிச்சாண்டவர் உற்சவம் வெகு விமரிசையாக வான வேடிக்கைகளுடன் களை கட்டியது. பிச்சாண்டவர் கோளத்தில் பவனி வந்த சிவபெருமானை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், 'நினைத்தாலே முக்தியளிக்கும்' திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 27ஆம் தேதி அண்ணாமலையார் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 6ஆம் தேதி அண்ணாமலையார் கோயிலில் உள்ள அண்ணாமலையார் கருவறையின் முன் அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்படும்.
அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா - 8-ம் நாளில் பிச்சாண்டவர் ஊர்வலம்! பின்னர் மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமாக உள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படும். இதனைத்தொடர்ந்து, பிச்சாண்டவர் உருவத் திருமேனியாக ஒருபகுதியாக அண்ணாமலையார் திருக்கோயிலில் இருந்து தங்க மேரு வாகனத்தில் புறப்பட்டார் சிவபெருமான்.
தொடர்ந்து, நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்த நிலையில், ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் காந்தி சிலையின் அருகில் வான வேடிக்கை நடைபெற்றது. இதனை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா - 7ஆம் நாளில் விநாயகர் ஊர்வலம்!