தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நலிவடைந்த நாடக கலைஞர்களுக்கு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்! - அதிமுக மருத்துவர் அணி

திருவண்ணாமலை: அதிமுக மருத்துவர் அணி மற்றும் அமைப்புச்சாரா ஓட்டுநர் அணி சார்பில் நலிவடைந்த நாடக கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.

AIADMK provides welfare assistance to debilitated dramatists
AIADMK provides welfare assistance to debilitated dramatists

By

Published : Aug 1, 2020, 5:13 PM IST

திருவண்ணாமலை கிரிவலப்பாதையிலுள்ள அருள்மிகு சிவசக்தி சித்தர் பீடத்தில், திருவண்ணாமலை அதிமுக தெற்கு மாவட்ட மருத்துவர் அணி மற்றும் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி சார்பில் சாந்தி பூஜை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 1) நடைபெற்றது. அதில் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபடவும், நலம் பெறவும் நவகிரகங்கள் சாந்தி பூஜை செய்யப்பட்டது.

மேலும் நலிவடைந்த நாடக கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி, முகக் கவசம், கிருமிநாசினி, உணவுப் பொருள்கள் ஆகியவையும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், நாடகக் கலைஞர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details