தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆ.ராசாவைக் கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய ராசாவை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசிய திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசாவைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

By

Published : Mar 28, 2021, 12:17 PM IST

திமுக சார்பில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் மார்ச் 25ஆம் தேதி தேர்தல் பரப்புரை நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திமுக எம்.பி., ஆ. ராசா தரக்குறைவாகப் பேசினார். இவரின் இந்த பேச்சைக் கண்டித்து தமிழ்நாட்டில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியும்; ஆ. ராசாவின் உருவபொம்மையை எரித்தும் தங்களது எதிர்ப்பையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருவண்ணாமலையில் அதிமுக நகரச் செயலாளர் செல்வம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது முதலமைச்சர் பழனிசாமியை அவதூறாகப் பேசிய ராசாவைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பியும் அவரை கைது செய்யக் கோரியும் முழக்கமிட்டனர். ராசாவைக் கைது செய்யும் வரை ஆர்ப்பாட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details