தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பால் உற்பத்தியாளர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கிய முன்னாள் அமைச்சர்! - agri krishna moorthy

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ. 4.5 லட்சம் மதிப்பிலான முகக்கவசங்கள், கையுறைகள் வழங்கும் நிகழ்வினை முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார்.

aavin workers protection mangalam tiruvannamalai  திருவண்ணாமலைச் செய்திகள்  ஆவின் பால் உற்பத்தியாளர்கள்  அக்ரி கிருஷ்ணமூர்த்தி  agri krishna moorthy  provide mash to aavin milk producers
பால் உற்பத்தியாளர்களுக்கு முகக் கவசங்களை வழங்கிய முன்னாள் அமைச்சர்

By

Published : Apr 22, 2020, 11:15 AM IST

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 560 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்துள்ள 50ஆயிரம் பால் உற்பத்தியாளர்களுக்கு முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளை வழங்கும் நிகழ்வினை திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடங்கிவைத்தார்.

மாவட்டத்தில் உள்ள பால் முகவர்கள், அன்றாடம் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருளான பாலினை, காலை, மாலை வேளைகளில் அருகில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் வழங்கி வருகின்றனர்.

பால் உற்பத்தியாளர்களுக்கு முகக் கவசங்கள் வழங்கிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி

பால் முகவர்கள், தங்களை கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் விதமாக அவர்களுக்கு 4.5 லட்ச ரூபாய் மதிப்பிலான முகக்கவசங்கள், கையுறைகளை திருவண்ணாமலை மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் அனுதினமும் வழங்கப்பட உள்ளன.

அதன் தொடக்கமாக, மங்கலம், நூக்காம்பாடி பகுதிகளில் உள்ள சுமார் 1,622 பால் உற்பத்தியாளர்களுக்கு நேற்று முகக்கவசங்கள், கையுறைகளை முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.

இதையும் படிங்க: ‘காணொளி காட்சி மூலம் செய்தியாளர் சந்திப்பு நடத்துக!’ - தினகரன் ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details