ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாரிசு இயக்குநர் வம்சி குடும்பத்துடன் திருவண்ணாமலையில் சாமி தரிசனம்! - வாரிசு இயக்குனர் வம்சி

வாரிசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வம்சி, தன் குடும்பத்தினர் மற்றும் படக்குழுவினருடன் திருவண்னாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

இயக்குனர் வம்சி
இயக்குனர் வம்சி
author img

By

Published : Jan 29, 2023, 7:16 PM IST

திருவண்ணாமலையில் இயக்குனர் வம்சி குடும்பத்துடன் சாமி தரிசனம்

திருவண்ணாமலை:நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம், வாரிசு. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. 200 கோடி ரூபாய்க்கும் மேல் வாரிசு படம் வசூல் சாதனை படைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. படம் வெளியாகி இரண்டு வாரங்களைக் கடந்த நிலையில் பல்வேறு திரையரங்குகளில் இன்னும் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி வருகிறது.

இந்நிலையில், வாரிசு படத்தினர் இயக்குநர் வம்சி பைடிபைலி, தன் குடும்பத்தாருடன் திருவண்னாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அண்ணாமலையார், உண்ணாமலையம்மன், நவக்கிரகங்கள் உள்ளிட்ட கோயிலின் பல்வேறு பிரகாரங்களில் குடும்பத்தினர் மற்றும் படக்குழுவினருடன் இயக்குநர் வம்சி சாமி தரிசனம் செய்தார்.

அண்ணாமலையார் கோயில் சார்பில் இயக்குநர் வம்சி பைடிபைலிக்கு மாலை அணிவிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பேசிய அவர், வாரிசு திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாகவும், வாரிசு படத்திற்கு தமிழக மக்கள் நல்ல வரவேற்பு அளித்ததாகவும் தெரிவித்தார். மேலும் மக்கள் தனக்கு அளித்த ஆதரவிற்கு மனமார்ந்த நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details