ஆரணி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் அறிமுகக் கூட்டம் முன்னாள் அமைச்சர் எ.வ வேலு முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். அப்போது எ.வ வேலு பேசுகையில், “2004ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது இருந்த அனைத்து கூட்டணி கட்சிகளும் தற்போது திமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளனர். எனவே இந்த முறையும் 40க்கு 40 என்று வெற்றி பெறுவோம்.
என்னது கருணாநிதி சிலையை திறந்தது இந்திரா காந்தியா? அதிர்ச்சி கிளப்பிய எ.வ.வேலு - சோனியா காந்தி
திருவண்ணாமலை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை திறந்தது இந்திரா காந்தி என கூறிய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எ.வ வேலு, பின் சுதாரித்துக்கொண்டு சோனியாகாந்தி என்று தெரிவித்தார்.
எ.வ வேலு
திமுக தலைவர் ஸ்டாலின் தயாரித்துள்ள தேர்தல் அறிக்கை கதாநாயகன், கதாநாயகி ஒன்றிணைந்ததுபோல் இருப்பதாகப் பத்திரிகைகளில் பாராட்டி வருகின்றனர். கருணாநிதியின் சிலையைத் திறப்பது என்னுடைய தந்தையின் சிலையை திறப்பதுபோன்ற உணர்வு தருகிறது, மிகுந்த பெருமையை தருகிறது என்று இந்திரா காந்தி கூறினார்” என வேலு பேசினார். அதன்பின் சுதாரித்துக்கொண்டு சோனியா காந்தி என்று தெரிவித்தார். அவரது இந்த பேச்சை சமூக வலைதளவாசிகள் கிண்டல் செய்துவருகின்றனர்.