தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக பாஜக கூட்டணியை நிறைய பேருக்கு பிடிக்கவில்லை - ராதிகா - பெண்கள்

திருவண்ணாமலை: திமுகவினர் பெண்களை தரக்குறைவாக பேசுவது தனக்கு வருத்தம் அளிப்பதாக சமத்துவ மக்கள் கட்சியின் நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

radhika
radhika

By

Published : Apr 3, 2021, 12:16 PM IST

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகை ராதிகா சரத்குமார் இன்று காலை வழிபாடு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்கள் மவுன புரட்சி செய்ய காத்திருக்கிறார்கள். மாற்றம் வேண்டும் என்பதை கூறித்தான் பிரசாரம் செய்து வருகிறேன். ஜெயலலிதாவிற்கு பிறகு பாஜகவுக்கு அதிமுக அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. அதனாலேயே அக்கூட்டணியை நிறைய பேருக்கு பிடிக்கவில்லை.

கலைத்துறையினருக்கு கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி எதுவும் செய்யவில்லை. திமுகவினர் நல்லவர்கள் போல் தங்களை சித்தரித்துக் கொண்டுள்ளனர். திமுகவில் நிர்வாகிகள், பேச்சாளர்கள் என அனைவருமே பெண்களை தரக்குறைவாக பேசுவது வருத்தம் அளிக்கிறது” எனக் கூறினார்.

அதிமுக பாஜக கூட்டணியை நிறைய பேருக்கு பிடிக்கவில்லை - ராதிகா

இதையும் படிங்க: மோடியின் வேண்டுதலை மீனாட்சி அம்மன் நிறைவேற்றமாட்டார் - நடிகை ரோகிணி

ABOUT THE AUTHOR

...view details