தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமண விழாவுக்கு சென்று திரும்பிய பேருந்தில் தீ விபத்து!

வந்தவாசி அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியவர்கள் வந்த பஸ் டயர் வெடித்து தீ பிடித்தது. இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர்.

திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியவர்கள் வந்த பஸ் டயர் வெடித்து தீ பிடித்தது
திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியவர்கள் வந்த பஸ் டயர் வெடித்து தீ பிடித்தது

By

Published : Dec 12, 2022, 10:41 AM IST

திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியவர்கள் வந்த பஸ் டயர் வெடித்து தீ பிடித்தது

திருவண்ணாமலை: செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் தாலுகா பெரியகாயம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த செங்கோட்டை என்பவரது மகன் வெங்கடேசனுக்கும், காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கையை சேர்ந்த கோபி மகள் வேதவள்ளிக்கும் அச்சரப்பாக்கத்தில் இன்று காலை திருமணம் நடைபெறுகிறது.

நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகக் காஞ்சிபுரத்திலிருந்து வந்த மணமகளின் உறவினர்கள், நண்பர்கள் 40 பேர் தனியார் பேருந்தில் அச்சரப்பாக்கம் சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மேல்மா கூட்ரோடு அருகே செல்லும்போது பேருந்தின் டயர் வெடித்துள்ளது. இதனால் டிரைவர் பஸ்சை ஓரமாக சாமர்த்தியமாக நிறுத்தி உள்ளார். பஸ் முழுமையான குளிர்சாதன வசதி கொண்டதாகவும் மூடப்பட்ட கண்ணாடிகளைக் கொண்டதாகவும் இருந்து உள்ளது. இதனால் பயணிகள் பேருந்திலிருந்து இறங்க முடியவில்லை. பயணிகள் செய்வதறியாது தவித்தனர்.

அப்போது சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரியில் இருந்த டிரைவர் உடனடியாக லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு லாரியில் இருந்து இரும்பு ராடால் பஸ்ஸின் கண்ணாடிகளை உடைத்து பயணிகள் வெளியேற வழி ஏற்படுத்தினார். உடனடியாக பயணிகள் அனைவரும் வேகமாக இறங்கினர். அப்போது பஸ் முழுமையாக திடீரென தீப்பிடித்தது.

இந்த சம்பவத்தில் 4 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இதுகுறித்து வந்தவாசி வடக்கு காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:ஜல்லிக்கட்டு காளை, யானை ஆசீர்வாதத்துடன் நடந்த திருமணம்!

ABOUT THE AUTHOR

...view details