திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி குடியிருப்புப் பகுதிக்குள் 9 அடி நீளம் கொண்ட கரும் சாரைப்பாம்பு புகுந்தது. பாம்பைக் கண்டு அலறி ஓடிய மக்கள், உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவலளித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், கருஞ்சாரைப் பாம்பை நீண்ட இடுக்கியைக் கொண்டு, பாம்புக்கு காயம் அடையாத வண்ணம் லாவகமாகப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் கிரிவலப் பாதையில் உள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் கொண்டு சென்று பாம்பை விட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி குடியிருப்புப்பகுதியில், கடந்த சில நாட்களாக எண்ணற்ற பாம்புகள் அடிக்கடி வந்துள்ளதாக, அங்குள்ள தோட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோல் பத்துக்கும் மேற்பட்ட சாரைப்பாம்பு மற்றும் நல்ல பாம்பு ஆகியவை மீட்புத்துறையினரால் பத்திரமாகப் பிடிக்கப்பட்டு, வனத்துறையினரிடம் கொடுக்கப்பட்டு, வனப்பகுதிகளில் எடுத்துச்சென்று விடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மாவட்ட வருவாய் அலுவலர் குடியிருப்புப் பகுதியின் பின்புறம், அடர்ந்த மரங்கள் வந்துள்ளதால் அங்கு பாம்புகள் இனப்பெருக்கம் அதிகரித்துக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட டீக்கடை ஊழியர் - காவலர்; வீடியோ வைரல்